Tiruppavai lyrics in tamil

Tiruppavai lyrics in tamil

Tiruppavai lyrics in tamil

images 2023 12 21T104435.783 2

நீளா துங்க³ ஸ்தனகி³ரிதடீ ஸுப்தமுத்³போ³த்⁴ய க்ருஷ்ணம்
பாரார்த்⁴யம் ஸ்வம் ஶ்ருதிஶதஶிரஸ்ஸித்³த⁴மத்⁴யாபயந்தீ |
ஸ்வோச்சி²ஷ்டாயாம் ஸ்ரஜி நிக³ளிதம் யா ப³லாத்க்ருத்ய பு⁴ங்க்தே
கோ³தா³ தஸ்யை நம இத³மித³ம் பூ⁴ய ஏவாஸ்து பூ⁴ய꞉ ||

[** அன்ன வயல் புது³வை யாண்டா³ள்
அரங்க³ர்கு பன்னு திருப்பாவைப் பல் பதி³யம்,
இன்னி ஶையால் பாடி³க்கொடு³த்தாள் நற்பாமாலை
பூமாலை ஶூடி³க்கொடு³த்தாளைச் சொல்
ஶூடி³க்கொடு³த்த ஶுட³ர்கொடி³யே
தொல்பாவை பாடி³யருளவல்ல பல்வளையாய்,
நாடி³ நீ வேங்க³ட³வற்கென்னை விதி³ யென்ற விம்மாற்றம்
நாம் கட³வா வண்ணமே நல்கு³।
**]

————-

மார்க³ழித் திங்க³ள் மதி³னிறைந்த³ நன்னாளால் ,
நீராட³ப் போது³வீர் போது³மினோ நேரிழையீர் ,
ஶீர் மல்கு³ம் ஆய்பாடி³ச் செல்வச் சிறுமீர்கா³ள் ,
கூர் வேல் கொடு³ந்தொ³ழிலன் நந்த³கோ³பன் குமரன் ,
ஏரார்ந்த³ கண்ணி யஶோதை³ யிளஞ்ஶிங்க³ம் ,
கார்மேனிச் செங்க³ண் கதி³ர் மதி³யம் போல் முக³த்தான்,
நாராயணனே நமக்கே பறை தருவான் ,
பாரோர் புக³ழப் படி³ந்து³ ஏல் ஓர் எம்பா³வாய் || 1 ||

வையத்து வாழவீர்கா³ள் நாமும் நம் பாவைக்கு,
ஶெய்யும் கிரிஶைக³ள் கேளீரோ,
பாற்கட³லுள் பையத் துயின்ற பரமனடி³ பாடி³,
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி³,
மையிட்டெழுதோ³ம் மலரிட்டு நாம் முடி³யோம்,
ஶெய்யாத³ன ஶெய்யோம் தீக்குறளை சென்றோதோ³ம்,
ஐயமும் பிச்சையும் ஆந்த³னையும் கை காட்டி,
உய்யுமாறு எண்ணி உக³ந்து³ ஏல் ஓர் எம்பா³வாய் || 2 ||

ஓங்கி³ உலக³ளந்த³ உத்தமன் பேர் பாடி³,
நாங்க³ள் நம் பாவைக்குச் சாற்றி நீராடி³னால்,
தீங்கி³ன்றி நாடெ³ல்லாம் திங்க³ள் மும்மாரி பெய்து³,
ஓங்கு³ பெருஞ் சென்னெல் ஊடு³ கயல் உக³ள,
பூங்கு³வளைப் போதி³ல் பொறி வண்டு³ கண்படு³ப்ப,
தேங்கா³தே³ புக்கிருந்து³ ஶீர்த்த முலை பற்றி வாங்க³,
குட³ம் நிறைக்கும் வள்ளல் பெரும் பஶுக்கள்,
நீங்கா³த³ ஶெல்வம் நிறைந்து³ ஏல் ஓர் எம்பா³வாய் || 3 ||

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்,
ஆழியுள் புக்கு முக³ந்து³ கொடா³ர்தேறி,
ஊழி முத³ல்வன் உருவம் போ³ல் மெய் கறுத்து,
பாழியன் தோ³ளுடை³ப் பற்ப³னாப³ன் கையில்,
ஆழி போல் மின்னி வலம்பு³ரி போல் நின்று அதி³ர்ந்து³,
தாழாதே³ ஶார்ங்க³ம் உதை³த்த ஶரமழை போல்,
வாழ உலகி³னில் பெய்தி³டா³ய்,
நாங்க³ளும் மார்க³ழி நீராட³ மகி³ழந்து³ ஏல் ஓர் எம்பா³வாய் || 4 ||

மாயனை மன்னு வட³மது³ரை மைந்த³னை,
தூய பெருனீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை,
தாயைக் குட³ல் விளக்கம் ஶெய்த³ தா³மோத³ரனை,
தூயோமாய் வந்து³ நாம் தூமலர் தூவித் தொழுது,
வாயினால் பாடி³ மனத்தினால் ஶிந்தி³க்க,
போய பிழையும் புகு³த³ருவான் நின்றனவும்,
தீயினில் தூஶாகு³ம் ஶெப்பு ஏல் ஓர் எம்பா³வாய் || 5 ||

புள்ளும் ஶிலம்பி³ன காண் புள்ளரையன் கோயிலில்,
வெள்ளை விளிஶங்கி³ன் பேரரவம் கேட்டிலையோ,
பிள்ளாய் எழுந்தி³ராய் பேய்முலை நஞ்ஜுண்டு³,
கள்ளச் சக³ட³ம் கலக் கழியக் காலோச்சி,
வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த³ வித்தினை,
உள்ளத்துக் கொண்டு³ முனிவர்க³ளும் யோகி³க³ளும்,
மெள்ள எழுந்து³ அரியென்ற பேரரவம்,
உள்ளம் புகு³ந்து³ குளிர்ந்து³ ஏல் ஓர் எம்பா³வாய் || 6 ||

கீஶு கீஶென்று எங்கு³ம் ஆனைச் சாத்தன்,
கலந்து³ பேஶின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே,
காஶும் பிறப்பும் கலக³லப்பக் கைபேர்த்து,
வாஶ நறுங்குழல் ஆய்ச்சியர்,
மத்தினால் ஓஶை படு³த்த தயிரரவம் கேட்டிலையோ,
நாயக³ப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி,
கேஶவனைப் பாட³வும் நீ கேட்டே கிட³த்தியோ,
தேஶமுடை³யாய் திறு ஏல் ஓர் எம்பா³வாய் || 7 ||

கீழவானம் வெள்ளென்று எருமை ஶிறு வீடு³,
மேய்வான் பரந்த³ன காண் மிக்குள்ள பிள்ளைக³ளும்,
போவான் போகி³ன்றாரைப் போகா³மல் காத்து,
உன்னைக் கூவுவான் வந்து³ நின்றோம்,
கோது³கலமுடை³ய பாவாய் எழுந்தி³ராய் பாடி³ப் பறை கொண்டு³,
மாவாய் பிளந்தா³னை மல்லரை மாட்டிய,
தே³வாதி³ தே³வனைச் சென்று நாம் ஶேவித்தால்,
ஆவாவென்று ஆராய்ந்து³ அருள் ஏல் ஓர் எம்பா³வாய் || 8 ||

தூமணி மாட³த்துச் சுற்றும் விளக்கெரிய,
தூ³பம் கமழ துயில் அணை மேல் கண் வளரும்,
மாமான் மக³ளே மணிக்கத³வம் தாள் திறவாய்,
மாமீர் அவளை எளுப்பீரோ,
உன் மக³ள் தான் ஊமையோ? அன்றிச் செவிடோ³? அனந்த³லோ,
ஏமப் பெருந்து³யில் மந்தி³ரப் பட்டாளோ?,
மாமாயன் மாத³வன் வைகுந்த³ன் என்றென்று,
நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பா³வாய் || 9 ||

நோற்றுச் சுவர்க்³க³ம் புகு³கி³ன்ற அம்மனாய்,
மாற்றமும் தாராரோ வாஶல் திறவாதா³ர்,
நாற்றத் துழாய்முடி³ நாராயணன்,
நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்,
பண்டு³ ஒரு நாள் கூற்றத்தின் வாய் வீழந்த³ கும்ப³கரணனும்,
தோற்றும் உனக்கே பெருந்து³யில் தான் தந்தா³னோ?,
ஆற்ற அனந்த³லுடை³யாய் அருங்க³லமே,
தேற்றமாய் வந்து³ திற ஏல் ஓர் எம்பா³வாய் || 10 ||

கற்றுக் கறவைக் கணங்க³ள் பல கறந்து³,
ஶெற்றார் திறல் அழியச் சென்று ஶெருச் செய்யும்,
குற்றம் ஒன்றில்லாத³ கோவலர் தம் பொற்கொடி³யே,
புற்றரவல்கு³ல் புனமயிலே போத³ராய்,
ஶுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து³,
நின் முற்றம் புகு³ந்து³ முகி³ல் வண்ணன் பேர் பாட³,
ஶிற்றாதே³ பேஶாதே³ ஶெல்வப் பெண்டா³ட்டி,
நீ எற்றுக்கு உறங்கு³ம் பொருள் ஏல் ஓர் எம்பா³வாய் || 11 ||

கனைத்திளங்க³ற்றெருமை கன்றுக் கிறங்கி³,
நினைத்து முலை வழியே நின்று பால் ஶோர,
நனைத்தில்லம் ஶேறாக்கும் நற்செல்வன் தங்கா³ய்,
பனித்தலை வீழ நின் வாஶற் கடை³ பற்றி,
ஶினத்தினால் தென்னிலங்கை³க் கோமானைச் செற்ற,
மனத்துக்கு இனியானைப் பாட³வும் நீ வாய் திறவாய்,
இனித்தான் எழுந்தி³ராய் ஈதெ³ன்ன பேருறக்கம்,
அனைத்து இல்லத்தாரும் அறிந்து³ ஏல் ஓர் எம்பா³வாய் || 12 ||

புள்ளின் வாய் கீண்டா³னைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தா³னைக் கீர்த்திமை பாடி³ப்போய்,
பிள்ளைக³ள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்,
வெள்ளி எழுந்து³ வியாழம் உறங்கி³ற்று,
புள்ளும் ஶிலம்பி³ன காண்! போது³ அரிக்கண்ணினாய்,
குள்ளக் குளிரக் குடை³ந்து³ நீராடா³தே³,
பள்ளிக் கிட³த்தியோ பாவாய்! நீ நன்னாளால்,
கள்ளம் தவிர்ந்து³ கலந்து³ ஏல் ஓர் எம்பா³வாய் || 13 ||

உங்க³ள் புழைக்கடை³த் தோட்டத்து வாவியுள்,
ஶெங்க³ழு நீர் வாய் நெகி³ழந்து³ அம்ப³ல் வாய் கூம்பி³ன காண்,
ஶெங்க³ல் பொடி³க் கூறை வெண்பல் தவத்தவர்,
தங்க³ள் திருக்கோயில் ஶங்கி³டு³வான் போத³ந்தா³ர்
எங்க³ளை முன்னம் எழுப்புவான் வாய் பேஶும்,
நங்கா³ய் எழுந்தி³ராய் நாணாதா³ய் நாவுடை³யாய்,
ஶங்கொ³டு³ ஶக்கரம் ஏந்து³ம் தட³க்கையன்,
பங்கயக் கண்ணானைப் பாடு³ ஏல் ஓர் எம்பா³வாய் || 14 ||

எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்கு³தி³யோ,
ஶில்லென்று அழையேன் மின் நங்கை³மீர் போத³ருகி³ன்றேன்,
வல்லை உன் கட்டுரைக³ள் பண்டே³ உன் வாய் அறிது³ம்,
வல்லீர்க³ள் நீங்க³ளே நானே தா³ன் ஆயிடு³க³,
ஒல்லை நீ போதா³ய் உனக்கு என்ன வேறு உடை³யை,
எல்லாரும் போந்தா³ரோ? போந்தா³ர் போந்து³ எண்ணிக் கொள்,
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை,
மாயானை பாடு³ ஏல் ஓர் எம்பா³வாய் || 15 ||

நாயகனாய் நின்ற நந்த³ கோ³பன் உடை³ய கோயில் காப்பானே,
கொடி³த் தோன்றும் தோரண வாயில் காப்பானே,
மணிக்கத³வம் தாள் திறவாய்,
ஆயர் ஶிறுமியரோமுக்கு,
அறைபறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தா³ன்,
தூயோமாய் வந்தோ³ம் துயில் எழப் பாடு³வான்,
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே³ அம்மா,
நீ நேய நிலைக் கத³வம் நீக்கு ஏல் ஓர் எம்பா³வாய் || 16 ||

அம்ப³ரமே தண்ணீரே ஶோறே அறஞ் ஶெய்யும்,
எம்பெ³ருமான் நந்த³கோ³பாலா எழுந்தி³ராய்,
கொம்ப³னார்க்கு எல்லாம் கொளுந்தே³ குல விளக்கே,
எம்பெ³ருமாட்டி யஶோதா³ய் அறிவுறாய்,
அம்ப³ரம் ஊடு³ அறுத்து ஓங்கி³ உலக³ளந்த³,
உம்ப³ர் கோமானே! உறங்கா³து³ எழுந்தி³ராய்,
ஶெம் பொற் கழலடி³ச் செல்வா ப³லதே³வா,
உம்பி³யும் நீயும் உறங்கே³ல் ஓர் எம்பா³வாய் || 17 ||

உந்து³ மத³ க³ளிற்றன் ஓடா³த³ தோள் வலியன்,
நந்த³கோ³பாலன் மருமக³ளே! நப்பின்னாய்!,
க³ந்த³ம் கமழும் குழலீ கடை³திறவாய்,
வந்து³ எங்கு³ம் கோழி அழைத்தன காண்,
மாத³வி பந்த³ல் மேல் பல்கால் குயில் இனங்க³ள் கூவின காண்,
பந்தா³ர் விரலி உன் மைத்துனந் பேர் பாட³,
ஶெந்தா³மரைக் கையால் ஶீரார் வளையொலிப்ப,
வந்து³ திறவாய் மகி³ழந்து³ ஏல் ஓர் எம்பா³வாய் || 18 ||

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்,
மெத்தென்ற பஞ்ச ஶயனத்தின் மேலேறி,
கொத்து அலர் பூங்கு³ழல் நப்பின்னை கொங்கை³மேல்,
வைத்துக் கிட³ந்த³ மலர் மார்பா³ வாய் திறவாய்,
மைத்தட³ங் கண்ணினாய் நீயுன் மணாளனை,
எத்தனை போது³ம் துயில் எழ ஒட்டாய் காண்,
எத்தனையேலும் பிரிவாற்ற கி³ல்லையால்,
தத்துவம் அன்று தக³வு ஏல் ஓர் எம்பா³வாய் || 19 ||

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று,
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்,
ஶெப்பமுடை³யாய் திறலுடை³யாய்,
ஶெற்றார்க்கு வெப்பம் கொடு³க்கும் விமலா துயிலெழாய்,
ஶெப்பன்ன மென்முலை செவ்வாயி சிறுமருங்கு³ல்,
நப்பின்னை நங்கா³ய் திருவே துயிலெழாய்,
உக்கமும் தட்டொளியும் தந்து³ன் மணாளனை,
இப்போதே³ எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பா³வாய் || 20 ||

ஏற்ற கலங்க³ள் எதி³ர்பொங்கி³ மீத³ளிப்ப,
மாற்றாதே³ பால் ஶொரியும் வள்ளல் பெரும் பஶுக்கள்,
ஆற்றப் படை³த்தான் மக³னே அறிவுறாய்,
ஊற்றமுடை³யாய் பெரியாய்,
உலகி³னில் தோற்றமாய் நின்ற ஶுட³ரே துயிலெழாய்,
மாற்றார் உனக்கு வலிதொலைந்து³ உன் வாஶற்கண்,
ஆற்றாது³ வந்து³ உன் அடி³ பணியுமாபோலே,
போற்றியாம் வந்தோ³ம் புக³ழந்து³ ஏல் ஓர் எம்பா³வாய் || 21 ||

அங்க³ண் மா ஞாலத்து அரஶர்,
அபி⁴மான ப⁴ங்க³மாய் வந்து³ நின் பள்ளிக் கட்டிற்கீழே,
ஶங்க³மிருப்பார் போல் வந்து³ தலைப்பெய்தோ³ம்,
கிங்கிணி வாய்ச் செய்த³ தாமரைப் பூப்போலே,
ஶெங்க³ண் ஶிறுச் சிறிதே³ எம்மேல் விழியாவோ,
திங்க³ளும் ஆதி³த்தியனும் எழுந்தா³ற்போல்,
அங்க³ண் இரண்டு³ங்கொண்டு³ எங்க³ள் மேல் நோக்குதி³யேல்,
எங்க³ள் மேல் ஶாபம் இழிந்து³ ஏல் ஓர் எம்பா³வாய் || 22 ||

மாரிமலை முழைஞ்ஜில் மன்னிக் கிட³ந்து³ உறங்கு³ம்,
ஶீரிய ஶிங்க³ம் அறிவுற்றுத் தீவிழித்து,
வேரி மயிர்ப்பொங்க³ எப்பாடு³ம் பேர்ந்து³ உத³றி,
மூரி நிமிர்ந்து³ முழங்கி³ப் புறப்பட்டு,
போத³ருமா போலே நீ பூவைப் பூவண்ணா,
உன் கோயில் நின்று இங்க³னே போந்த³ருளி,
கோப்புடை³ய ஶீரிய ஶிங்கா³ஶனத்து இருந்து³,
யாம் வந்த³ காரியம் ஆராய்ந்து³ அருள் ஏல் ஓர் எம்பா³வாய் || 23 ||

அன்று இவ்வுலக³ம் அளந்தா³ய் அடி³போற்றி,
ஶென்றங்கு³த் தென்னிலங்கை³ ஶெற்றாய் திறல் போற்றி,
பொன்றச் சக³ட³ம் உதை³த்தாய் புக³ழ போற்றி,
கன்று குணிலா எறிந்தா³ய் கழல் போற்றி,
குன்று குடை³யாய் எடு³த்தாய் கு³ணம் போற்றி,
வென்று பகை³ கெடு³க்கும் நின்கையில் வேல் போற்றி,
என்றென்றுன் ஶேவக³மே ஏத்திப் பறை கொள்வான்,
இன்று யாம் வந்தோ³ம் இரந்து³ ஏல் ஓர் எம்பா³வாய் || 24 ||

ஒருத்தி மக³னாய்ப் பிறந்து³,
ஓர் இரவில் ஒருத்தி மக³னாய் ஒளித்து வளர,
த³ரிக்கிலான் ஆகி³த்தான் தீங்கு³ நினைந்த³,
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்ஜன் வயிற்றில்,
நெருப்பென்ன நின்ற நெடு³மாலே,
உன்னை அருத்தித்து வந்தோ³ம் பறை தருதி³யாகி³ல்,
திருத்தக்க ஶெல்வமும் ஶேவகமும் யாம்பாடி³,
வருத்தமும் தீர்ந்து³ மகி³ழந்து³ ஏல் ஓர் எம்பா³வாய் || 25 ||

மாலே ! மணிவண்ணா ! மார்க³ழி நீராடு³வான்,
மேலையார் ஶெய்வனக³ள் வேண்டு³வன கேட்டியேல்,
ஞாலத்தையெல்லாம் நடு³ங்க³ முரல்வன,
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சஜன்னியமே,
போல்வன ஶங்க³ங்க³ள் போய்ப்பாடு³ உடை³யனவே,
ஶாலப்பெரும் ப³றையே பல்லாண்டு³ இஶைப்பாரே,
கோல விளக்கே கொடி³யே விதானமே,
ஆலின் இலையாய் அருள் ஏல் ஓர் எம்பா³வாய் || 26 ||

கூடா³ரை வெல்லும் ஶீர் கோ³விந்தா³,
உன் தன்னை பாடி³ பறை கொண்டு³ யாம் பெறு ஶம்மானம்,
நாடு³ புக³ளும் பரிஶினால் நன்றாக³,
ஶூட³க³மே தோள் வளையே தோடே³ ஶெவிப்பூவே,
பாட³க³மே என்றனைய பல்க³லனும் யாம் அணிவோம்,
ஆடை³ உடு³ப்போம் அத³ன் பின்னே பாற்ஶோறு,
மூட³ நெய் பெய்து³ முழங்கை³ வழிவார,
கூடி³யிருந்து³ குளிர்ந்து³ ஏல் ஓர் எம்பா³வாய் || 27 ||

கறவைக³ள் பின்ஶென்று கானம் ஶேர்ந்து³ உண்போ³ம்,
அறிவொன்றும் இல்லாத³ ஆய்க்குலத்து,
உந்தன்னை பிறவி பெருந்த³னைப் புண்ணியம் யாம் உடை³யோம்,
குறை ஒன்றும் இல்லாத³ கோ³விந்தா³,
உன் தன்னோடு³ உறவேல் நமக்கு இங்கு³ ஒழிக்க ஒழியாது³,
அறியாத³ பிள்ளைக³ளோம் அன்பி³னால்,
உன் தன்னை ஶிறுபேர் அழைத்தனவும் ஶீறி அருளாதே³,
இறைவா! நீ தாராய் பறை ஏல் ஓர் எம்பா³வாய் || 28 ||

ஶிற்றஞ் ஶிறு காலே வந்து³ன்னை ஶேவித்து,
உன் போற்றாமரை அடி³யே போற்றும் பொருள் கேளாய்,
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து³,
நீ குற்றேவல் எங்க³ளை கோள்ளாமல் போகா³து³,
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோ³விந்தா³,
எற்றைக்கும் ஏழ ஏழ பிறவிக்கும்,
உன் தன்னோடு³ உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்,
மற்றை நம் காமங்க³ள் மாற்று ஏல் ஓர் எம்பா³வாய் || 29 ||

வங்க³க் கட³ல் கடை³ந்த³ மாத³வனை கேஶவனை,
திங்க³ள் திருமுக³த்துஶ் ஶெயிழையார் ஶென்றிறைஞ்ஜி,
அங்க³ப் பறை கொண்ட³வாற்றை,
அணிபுது³வை பைங்க³மலத் தண்தெரியல் பட்டர் பி³ரான் கோதை³ ஶொன்ன,
ஶங்க³த் தமிழ மாலை முப்பது³ம் தப்பாமே,
இங்கி³ப் பரிஶுறைப்பார் ஈரிரண்டு³ மால் வரைத் தோள்,
ஶெங்க³ன் திருமுக³த்துச் செல்வத் திருமாலால்,
எங்கு³ம் திருவருள் பெற்று இன்பு³றுவர் எம்பா³வாய் || 30 ||

ஆண்டா³ள் திருவடி³க³ளே ஶரணம் ||

ஸ்வஸ்தி ||

thiruppavai in tamil,thiruppavai lyrics in tamil,thiruppavai,andal thiruppavai songs in tamil,thiruppavai tamil,andal thiruppavai tamil,tiruppavai,andal thiruppavai,tiruppavai in tamil,thiruppavai in tamil songs,thiruppavai in tamil lyrics,thiruppavai lyrics,tamil devotional,thiruppavai in english lyrics,thiruppavai lyrics in english,andal pasuram in tamil,tamil devotional songs,tiruppavai pravachanams,sri andal tiruppavai,thiruppavai pasuram

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *